தென்கொரிய வேலைவாய்ப்பு தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவிப்பு

தென் கொரியா மீன்பிடித் தொழிலில் வேலை வாய்ப்புக்காக 2022 இல் நடைபெறவுள்ள கொரிய மொழித் தேர்ச்சிப் பரிட்சைக்கான பரீட்சை…

தென் கொரியா மீன்பிடித் தொழிலில் வேலை வாய்ப்புக்காக 2022 இல் நடைபெறவுள்ள கொரிய மொழித் தேர்ச்சிப் பரிட்சைக்கான பரீட்சை நுழைவுச் சீட்டுகள் வழங்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளது. 22.08.2022 முதல் 26.08.2022 வரை இணைய வழியில் இந்த நடைமுறை இடம்பெறவுள்ளது.

பரீட்சைக்குத் தேவையான நுழைவுச் சீட்டுகள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.slbfe.lk ஊடாக வௌியிடப்படவுள்ளது. 2022ஆம் ஆண்டு நடைபெறும் உற்பத்தித் துறையில் மொழித் தேர்ச்சிப் பரீட்சைக்கான பரீட்சை வினாத்தாள்களைப் பெற்ற விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பில்லை என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.

இதற்கு 18-39 வயதுக்கு இடைப்பட்ட நபர்கள் விண்ணப்பிக்கலாம், மேலும் நிறக்குருடு இல்லாதவர்கள், சிறையில் அடைக்கப்படாதவர்கள் அல்லது கடுமையான குற்றங்களுக்காக தண்டிக்கப்படாதவர்கள், மேலும் தென் கொரியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டதற்கான முந்தைய பதிவுகள் எதுவும் இல்லாதவர்களுக்கு இதற்காக விண்ணப்பிக்க முடியும்.

பரீட்சை நுழைவுச் சீட்டுக்களை பெறுவதற்காக, விண்ணப்பப் படிவம், கடவுச்சீட்டின் ஸ்கேன் நகல், 3 மாதங்களுக்குள் எடுக்கப்பட்ட 3.5 cm × 4.5 cm புகைப்படத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல் மற்றும் பரீட்சைக் கட்டணமாக 10,108 ரூபாய் செலுத்திய பற்றுச்சீட்டு ஆகியவை அவசியம். மீன்பிடித் தொழிலில் வேலை செய்வதற்குத் தேவையான மொழித் தேர்ச்சிப் பரீட்சை 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் 5 முதல் நவம்பர் 30 வரை இணைய வழியில் நடைப்பெறும்.

பரீட்சை மற்றும் பரீட்சை நுழைவுச் சீட்டுகளை வழங்குதல் தொடர்பான மேலதிக தகவல்களை www.slbfe.lk என்ற பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.

WAK