தேசிய மட்ட போட்டியில் பாத்திமா கல்லூரி முதலிரு இடங்களை பெற்று சாதனை

(எம்.யூ.எம்.சனூன்)

ண்மையில் அநுராதபுரம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் நடைபெற்ற “கர்நாடக சங்கீதமும் முஸ்லிம் மாணவர்களுக்குமான போட்டி” நிகழ்ச்சியில் தேசிய மட்ட போட்டியில் புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரி மாணவிகள் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களை பெற்று சாதித்துள்ளனர்.

மாணவிகள் கலந்து கொண்ட அல்ஹிகாயா வல்பைத் நிகழ்ச்சியில் முதலிடத்தையும், நஷீத் நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

அல் ஹிகாயா வல் பைத் நிகழ்ச்சியை தயாரித்து பயிற்றுவித்த ஆசிரியை திருமதி சரூபியா அவர்களுக்கும்,
நஷீத் நிகழ்ச்சியை தயாரித்து பயிற்றுவித்த பதில் அதிபர் திருமதி ஸரீனா பர்வீன் அவர்களுக்கும், மாகாண மட்டம் இரண்டாம் இடம் பெற்ற கஸீதா நிகழ்ச்சியை பயிற்றுவித்த சர்மிளா ஆசிரியை, மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து ஆசிரியர்கள் பெற்றோர்களுக்கும் நன்றியை தெரிவிப்பதோடு, சாதனை நிகழ்த்திய மாணவர்களுக்கும் கல்லூரி நிர்வாகம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

WAK