தேவையுடைய குடும்பங்களுக்கு உலருணவு பொதிகள் பகிர்தளிப்பு

(எம்.யூ.எம்.சனூன்)

புத்தளம் நகரசபை உறுப்பினர் ரனீஸ் பதூர்தீனின் முயற்சியில் முஸ்லிம் ஹேன்ட்ஸ் தொண்டு நிறுவனத்திடமிருந்து கிடைக்கப்பெற்ற உலர் உணவுப்பொருட்கள் சுமார் 150 தெரிவு செய்யப்பட்ட தேவையுடைய குடும்பங்களுக்கு நேற்று (07-09-2022) பகிர்ந்தளிக்கப்பட்டன.

ஒரு குடும்பத்திற்காக தலா ரூபா 15,000 பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டதுடன் பொதிகளின் மொத்தப் பெறுமதி ரூபா 2,250,000/- (இருபத்திரண்டு இலட்சத்தி ஐம்பதாயிரம் ) என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

பொருளாதார நெருக்கடி மிகுந்த தற்போதைய காலகட்டத்தில் நகரசபை உறுப்பினரால் இவ்வாறான மனிதாபிமான செயற்திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை விஷேட அம்சமாகும்.

இதன்போது பயனாளிகள் நகரசபை உறுப்பினருக்கு தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

WAK