தையல் பயிற்சியை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு

ல்பிட்டி மணல் தோட்டம் செய்னப் குர்ஆன் மத்ரஸா நடாத்தும் தையல் பயிற்சி நிலையத்தின் சான்றிதழ் வழங்கும் வைபவமும் பரிசளிப்பு விழாவும் 14.01.2023 அன்று கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஏ.கே.அலாவுதீன் அவர்களின் தலைமையில் நடந்தது.

இதில் பிரதம அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புத்தளம் கல்பிட்டி பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான அல்ஹாஜ் அலி சப்ரி ரஹீம் கலந்து கொண்டார். தையல் பயிற்சிகளை முடித்து சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பசார் பள்ளி தலைவர் அல்ஹாஜ் சப்ரி, அல்ஹிரா பாடசாலை அதிபர் அஷ்ரப் அலி, அல்ஹிரா பாடசாலை முன்னாள் அதிபர் அயூப்கான், செய்னப் பாடசாலை நிர்வாகி எஸ்.எம். ரியாஸ், பாராளுமன்ற உறுப்பினரின் திகழி இணைப்பாளர் அஸ்வர், முசல் பிட்டி அமைப்பாளர் மூசின், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் ஜவ்ஸி ஜமால்தீன் மற்றும் தையல் பயிற்சி பெற்ற, பயிற்சி பெறும் மாணவிகள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

WAK