நகரசபையினால் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு செயற்திட்டம் முன்னெடுப்பு

புத்தளம் நகரபிதா எம்.எஸ்.எம்.ரபீக் அவர்களின் விஷேட பணிப்பின் பேரில் நகரசபையினால் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு செயற்திட்டம் புத்தளம் சவீவபுரம், நூர் நகர் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் நேற்று (13-12-2022) முன்னெடுக்கப்பட்டன.
.
சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளிலும் டெங்கு நோயாளர்கள் அதிகரித்துள்ளதுடன் எமது நகர் மற்றும் நகரை அண்டிய பகுதிகளிலும் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதையடுத்து நகரபிதாவின் விஷேட பணிப்புரைக்கமைய நகரசபையினால் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
.
இதன்போது அதிகாரிகளால் இனங்காணப்பட்ட நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் அழிக்கப்பட்டதுடன் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தலும் வழங்கப்பட்டது.புத்தளம் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையும் இந்நடவடிக்கைகளுக்கு தமது ஒத்துழைப்பை வழங்கி வருகிறது.
.
ஏனைய பகுதிகளிலும் இச்செயற்திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உங்கள் வீடுகளையும், சூழலையும் தூய்மையாக வைத்துக் கொள்வதன்மூலம் கொடிய டெங்கு நோயிலிருந்து எமது உறவுகளைப் பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குமாறு புத்தளம் நகரசபை விநயமாக வேண்டிக்கொள்கிறது.

WAK