நினைவில் நிலைத்துள்ள முன்னோர்கள் – அல்ஹாஜ் எச்.எஸ் .எம் . இஸ்மாயில்
நினைவில் நிலைத்துள்ள முன்னோர்கள் – அல்ஹாஜ் எச்.எஸ் . இஸ்மாயில்
அல்ஹாஜ் எச்.எஸ் .எம் .இஸ்மாயில்
புத்தளம் சென்ற் அன்ரூஸ் ஆங்கிலப் பாடசாலையிலும் , கொழும்பு வெஸ்லி கல்லூரியிலும் பயின்று சட்டக்கல்லூரியில் சேர்ந்து சட்டத்தரணியானவர். சட்டக் கல்லூரி இறுதி தேர்வில் முதலாவது பரிசைத் தட்டிக் கொண்ட முதல் முஸ்லிம் மாணவர் என்ற பெருமை இவரைச் சாரும். புத்தளத்தில் நம்பிக்கையுள்ள , நீதி தவறாத சட்டத்தரணியாகப் பிரசித்தமானார். புத்தளத்தின் முதல் முஸ்லிம் சட்டத்தரணியும் இவரே. புத்தளம் உள்ளூர் சபையிலும் ( லோக்கல் போட் ) உள்ளூர் மாவட்ட சபையிலும் ( உ.டி.சி ), நகரசபையிலும் உறுப்பினராகவும், உப-தலைவராகவும், தலைவராகவும் பதவி வகித்தார். அரசுடன் சம்பந்தப்பட்ட பல சபைகளில் கடமை புரிந்துள்ளார். இலங்கையின் அழகிய பள்ளிவாசலாகக் கருதப்பட்ட புத்தளம் முஹைதீன் கொத்துபாப் பள்ளி வாசலின் கட்டிடச்சபையின் தலைவராகவும், அதன் நம்பிக்கை பொறுப்பாளராகவும் பணியாற்றினார் , எம்.பி.இ , ஓ.பி.இ போன்ற பட்டங்கள் அவரைத் தேடி வந்தன. புத்தளம் முஸ்லிம் மக்களின் தூங்கிய வாழக்கையில் விழிப்புணர்ச்சியைத் தூண்டும் பல தாபனங்களை உண்டாக்கினார். கூட்டுறவுத்துறைக்கு இவர் ஆற்றிய பணி மகத்தானது. அரசியலில் ஈடுபட்டு இலங்கை பாராளுமன்றத்திற்கு போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்டு முதல் பாராளுமன்றப் பிரதிநிதி என்ற பெருமையையும் பெற்றார். பொதுவாக பாராளுமன்றத்தினரால் கௌரவமாக மதிக்கப்பட்டு உப சபாநாயகராகவும் , ஈற்றில் சகல கட்சிகளும் ஒரே மனதாக போட்டியின்றி தெரிவு செய்த சபாநாயகராகவும் பாராட்டத் தக்கவகையில் கடமையாற்றி அரசியலிலிருந்து ஓய்வு பெற்றார். ‘பைத்துல்மால் நிதியின்’ தாபகரும் இவர்களே. புத்தளத்தில் தோன்றிய பெரியார்களில் முதல்வராக என்றும் மதிக்கப்படக்கூடிய கண்ணியத்திற்க்குரியவர் . ‘இஸ்மாயில் ஐயா’ என்றழைக்கப்பட்ட இஸ்மாயில் ஹாஜியார் என்பதில் தவறில்லை.

Maradana Zahira college,

Maradana Zahira college,























