நினைவில் நிலைத்துள்ள முன்னோர்கள் – அல்ஹாஜ் எஸ்.எம் .அசன் குத்தூஸ்

03. அல்ஹாஜ் எஸ்.எம் .அசன் குத்தூஸ்
எஸ்.இ.எம். என்றும் , ‘சறுவர் ‘ என்றும் அழைக்கப்பட்ட இவர் அசாதாரணமான முயற்சியும் , உழைப்பும் நிறைந்த முன்னோக்குவாதியாக வாழ்ந்து உயர்வடைந்தார்.கொழும்பு வெஸ்லிக் கல்லூரியில் பயின்று பின்பு நில அளவையாளரானார்.உத்தரவு பெற்ற நில அளவையாளராகவும் , ஏல விற்பனைக்காரராகவும் தொழிலாற்றினார். புத்தளம் பகுதியில் பல இடங்களில் வியாபார நிலையங்களை ஏற்டபடுத்தி பல நிறுவனங்களின் முகவராக கடமையாற்றி பிரபல வணிகராக விளங்கினார்.பல சமூக சங்கங்களிலும் பணியாற்றினார்.இறுதியாகப் புத்தளம் பாராளுமன்ற பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டு அப்பதவியிலிருக்கும் போதே காலமானார்.
(புத்தளம் வரலாறும் மரபுகளும் – ஏ. என்.எம். ஷாஜஹான்)

( S.M.ASAN KUDOOS WITH HIS SON )