நியூசிலாந்தின் புதிய பிரதமரானார் கிறிஸ் ஹிப்கின்ஸ்

நியூசிலாந்தின் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் பதவி விலகியதையடுத்து கிறிஸ் ஹிப்கின்ஸ் இன்று (25-01-2023) பதவியேற்றார். முன்னாள் பிரதமரான ஜசின்டா ஆர்டெர்ன் தமது பதவி விலகல் கடிதத்தை ஆளுநர் சிண்டி கிரோவிடம் கையளித்தார்.

இதன்படி, நியூசிலாந்தின் 41வது பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவியேற்றுள்ளார். இவர் முன்னாள் கல்வி மற்றும் சுகாதார அமைச்சராக பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

WAK