நுரைச்சோலையில் வகுப்பறை கட்டிட அடிக்கல் நாட்டு வைபவம்

நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் வகுப்பறை கட்டிட நிர்மாணிப்புக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்று முன்தினம் 2022-09-09 (வௌ்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு நடைபெற்றது.

பாடசாலையின் வகுப்பறை பற்றாக்குறையை நிவர்த்திக்கும் முகமாக பழைய மாணவர் சங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் இவ்வகுப்பறை கட்டிடம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

இதற்கான செலவாக சுமார் ஒரு மில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக நன்கொடை வழங்கியோருக்கு பழைய மாணவர் சங்கம் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றது.

WAK