நூலாக்க போட்டியில் முதலிடம்.

புத்தசாசனம், கலாசாரம் மற்றும் மத அலுவலகள் அமைச்சினால், 2019ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட இலக்கியப் போட்டிகளில் ” சிறுவர் கதை” (நூலாக்கம்) போட்டியில் பங்கு பற்றி முதலாம் இடத்தைப் புத்தளம், கங்காணிக் குளம் வீதியில் வசிக்கும் செல்வி, அப்துல் றவூப்  அத்தோடு றைசா பர்வீன் பெற்றுக்கொண்டுள்ளார்.

இவர் புத்தளம் மாவட்ட அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிபவர். இந்நிகழ்வு கொழும்பு மருதானை டவர் ஹோல் மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றது.

இவரது சிறுவர் கதைகள் அரச அரச அச்சகத் திணைக்களத்தினால் நூலாக்கம் பெற்றிருப்பதும் விசேட அம்சமாகும். சிறுவர்களுக்கேற்ற வண்ணம் வர்ணப் படங்களுடன் நூல் அச்சிடப்பட்டிருக்கின்றது. நூலில் வரும் வர்ணப் படங்கள் அனைத்தையும் கதாசிரியர் றைசா பர்வீன் வரைதிருக்கின்றார். அத்தோடு இவர் “சித்திர ஆக்கப்” போட்டியில் ஆறுதல் பரிசினைத் தட்டிக் கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

புத்தளம் தினகரன் நிருபர்