பதிவு செய்யப்பட்ட பள்ளிவாசல்களுக்கு பேரீத்தம் பழங்கள் பகிர்ந்தளிப்பு

(எம்.யூ.எம்.சனூன்)

வூதி அரேபிய அரசாங்கத்தினால் இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்ட 50 தொன் பேரீத்தம் பழங்களின் ஒரு தொகுதி புத்தளம் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட பள்ளிவாசல்களின் நிர்வாகிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.

இதேவேளை புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் பீ.சீ.எம்.எச். நிறுவனத்தினால் புத்தளம் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத பள்ளிவாசல்களுக்கு நோன்புக் கஞ்சி சமைப்பதற்கான அரிசியும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வு நேற்று (05-04-2023) புத்தளம் மஸ்ஜித் வீதி கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது. புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமும், புத்தளம் மாவட்ட செயலாளர் திரு. ஹேரத்தும் இணைந்து அரிசி மற்றும் பேரீத்தம் பழங்களை பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் கையளித்தனர்.

WAK