பத்ரு சஹாபாக்கள் நினைவு தின வைபவம்

மதுரங்குளி கனமூலை அன்னூர் தக்கியா பள்ளிவாசலில் இம்முறை பத்ரு சஹாபாக்கள் நினைவு தின வைபவம் மிக விமரிசையாக இடம் பெறவுள்ளது. ரமழான் 17 ம் இரவான 02 ம் திகதி சனிக்கிழமை மாலை இப்தாருடன் இந்நிகழ்வுகள் …

ரூஸி சனூன்  புத்தளம்

மதுரங்குளி கனமூலை அன்னூர் தக்கியா பள்ளிவாசலில் இம்முறை பத்ரு சஹாபாக்கள் நினைவு தின வைபவம் மிக விமரிசையாக இடம் பெறவுள்ளது.

ரமழான் 17 ம் இரவான 02 ம் திகதி சனிக்கிழமை மாலை இப்தாருடன் இந்நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளன.

தக்கியா பள்ளி வாசல் தலைவர் அப்துல் ஜப்பாரின் ஏற்பாட்டில் அதிபர் அல் ஹாபிழ் ஏ. அயூப்கான் (பலாஹி )தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் விஷேட சொற்பொழிவினை மதுரங்குளி கனமூலை உம்முல் பழ்ழ் பெண்கள் அரபுக்கல்லூரி அதிபர் ஏ.ஏ. முஜுபுர்ரஹ்மான் (மனாரி) நிகழ்த்தவுள்ளார்.

துஆ பிராத்தனையை கடயாமோட்டை ரஷீதிய்யா அரபுக்கல்லூரி விரிவுரையாளர் அஷ்ஷெய்க் சல்மான் (தீனி)  நிகழ்த்தவுள்ளார்.

குறித்த இந்த கனமூலை அன்னூர் தக்கியா பள்ளிவாசலில் இருந்து வரலாற்றில் முதற்தடவையாக இந்நிகழ்வுகள் யாவும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் நேரடியாக ஒலிபரப்பு செய்யப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.