பயனாளிகளுக்கு செயலமர்வு

ரூஸி சனூன் புத்தளம்
புத்தளம் மாவட்டம் வண்ணாத்திவில்லு தெற்கு பிரதேசத்தில் வதியும் வாழ்வாதாரம் மற்றும் சுயதொழில் வேலை வாய்ப்புக்களை மேற்கொள்ளும் யுவதிகளுக்கான செயலர்வொன்று அண்மையில் (18) வண்ணாத்திவில்லு சமூக மைய மண்டபத்தில் இடம்பெற்றது.
பிரண்ட்ஸ் தொண்டு நிறுவனத்தின் நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர் எம்.எப்.சுபியானி தலைமையில் நடைபெற்ற இந்த செயலமர்வில் வளவாளராக திறன் மேம்பாடு அதிகாரி செனில் தனுஷ்க விஜயகோன் கலந்து கொண்டார்.
30 க்கும் மேற்பட்ட பயனாளிகள் இதில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
குறித்த ஒரு தொழிலை எவ்வாறு தேர்வு செய்வது, சந்தை வாய்ப்பை எவ்வாறு அறிந்து கொள்வது,  தொழிலின் சாதக, பாதகங்கள், வளங்களை பெறுதல் மற்றும்  பயன்படுத்துதல், தொழிலுக்கான அரசின் சலுகைகள்,
தொழிலுக்கான வியாபார திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புக்களில் இங்கு விளக்கமளிக்கப்பட்டது.