பரீட்சை நிலையங்களுக்கு இலத்திரனியல் சாதனங்கள் கொண்டு செல்லத் தடை

யர்தர (உ/த) பரீட்சையின் போது எந்தவொரு இலத்திரனியல் சாதனங்களையும் கொண்டு செல்வதோ அல்லது வைத்திருக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறினால் பரீட்சை நிலையத்திலிருந்து வெளியேற்றப்படுவதற்கு வழிவகுக்கும் மற்றும் பரீட்சார்த்தி ஐந்தாண்டு காலத்திற்கு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு தடை விதிக்கப்படும் என பரீட்சை திணைக்கள ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பரீட்சை சட்டத்தின்படி, கைத்தொலைபேசிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய புளூடூத் சாதனங்கள் போன்ற இலத்திரனியல் சாதனங்களை கொண்டு வர பரீட்சார்த்திகளுக்கு அனுமதி இல்லை. கொண்டு வர அல்லது பரீட்சார்த்திகளின் வசம் வைத்திருக்க அனுமதி இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கூறிய சாதனங்களை பரீட்சார்த்திகள் சென்றடையக்கூடிய அல்லது அணுகக்கூடிய இடங்களில் வைத்திருப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, பரீட்சார்த்திகள் தமது கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களை பரீட்சை நிலையத்திற்கு வெளியே வைத்திருக்குமாறு ஆணையாளர் நாயகம் கேட்டுக் கொண்டுள்ளார்.

WAK