பஸ்னத் சரீஹாவின் சாதனை – கரைத்தீவின் கல்வி வரலாற்றில் புதியதொரு திருப்பம்

கரைத்தீவைச் சேர்ந்த பஸ்னத் சரீஹா 2020 இல் இடம்பெற்ற க.பொ.த (சா/த) பரீட்சையில் விஞ்ஞானப் பிரிவில் 3A ( Z : 2.1575) பெறுபேற்றைப் பெற்றதன் மூலம் புத்தளம் மாவட்டத்தின் 9 ஆவது நிலையைப் பெற்றதன் மூலம் புத்தளம் மாவட்டத்தின் 9 ஆவது நிலையைப் பெற்று கரைத்தீவின் கல்வி வரலாற்றில் புதியதொரு சாதனையைப் பதிவு செய்துள்ளார்.

பஸ்னத் சரீஹா

(ரஸ்மி ஆசிரியர் – கரைத்தீவு) 

புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரியின் மாணவி, கரைத்தீவைச் சேர்ந்த ஏ.எம்.பர்ஹான் மற்றும் எஸ்.எம்.பி.எம். முஹிபுர் நிசா (ஆசிரியை – வேப்பமடு மு.ம.வி.) தம்பதியினரின் புதல்வி பஸ்னத் சரீஹா 2020 இல் இடம்பெற்ற க.பொ.த (சா/த) பரீட்சையில் விஞ்ஞானப் பிரிவில் 3A ( Z : 2.1575) பெறுபேற்றைப் பெற்றதன் மூலம் புத்தளம் மாவட்டத்தின் 9 ஆவது நிலையைப் பெற்று கரைத்தீவின் கல்வி வரலாற்றில் புதியதொரு சாதனையைப் பதிவு செய்துள்ளார்.

 

பஸ்னத் சரீஹா தரம் 1 முதல் 5 வரைகக்குமான ஆரம்பக் கல்வியை பு/கரைத்தீவு மு.ம. வித்தியாலயத்திலும், 6 முதல் 11 ஆம் தரம் வரை பு/பாத்திமா மகளிர் கல்லூரியிலும் பயின்றார். இவர் க.பொ.த (சா/த) பரீட்சையில் 9 ஏ சித்தி பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், 2020 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் கரைத்தீவில் இருந்து விஞ்ஞானப் பிரிவில் தோற்றிய மாணவர்களுள் ஐவரில், நால்வர் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அவர்கள் : எம்.என். நக்சத் 2B , 1C (z :1.4) எம்.என். நக்ரிபா 2A , 1C (z : 1.2) W. மஹ்ரிபா 3C (z :0.56) எம்.ஆர். பஸ்ரான் 3S (z : 0.7)