பாடசாலைகள் ஜூன் 29 ஆம் திகதி ஆரம்பம்

பாடசாலைகள் ஜூன் 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எனினும் மாணவர்கள் வரத்தேவையில்லை எனவும் அதிபர், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் அனைவரும் வர வேண்டும் எனவும் தொற்று நீக்கம், சிரமதானம், நேர அட்டவணையை சீர்செய்தல், பாடசாலை திட்டமிடல் என்பன இடம்பெறும் எனவும் ……

பாடசாலைகள் ஜூன் 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. ஜூன் 29 – மாணர்கள் வரத்தேவையில்லை எனவும் அதிபர், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள்  அனைவரும் வர வேண்டும் எனவும் குறித்த வாரம் தொற்று நீக்கம், சிரமதானம், நேர அட்டவணையை சீர்செய்தல், பாடசாலை திட்டமிடல் என்பன இடம்பெறும் எனவும் கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.

ஜூலை 6 ஆம் திகதி தரம் 5, தரம் 11, தரம் 13 மாணவர்களும் ஜூலை 20 ஆம் திகதி முதல் தரம் 10, தரம் 12 மாணவர்களும் ஜூலை 27 ஆம் திகதி தரம் 1, 2 தவிர்ந்த ஏனைய வகுப்பு (3, 4, 6, 7, 8, 9) மாணவர்கள் சமூகமளிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.