பாடசாலை சிறந்த செயற்பாடுகளுக்கான விருது ஆண்டிமுனை ஸ்ரீ கிருஷ்ணாவுக்கு

அதிபர் ஆசிரியர்களின் ஒத்துழைப்பு, விடாமுயற்சி காரணமாக முன்னேற்றம் காணத்தொடங்கியது. பல நவீன செயற்திட்டங்கள் அதிபரால் அறிமுகப்படுத்தப்பட்டு இங்கு அமுல்படுத்தப்பட்டன. புத்தளம் கல்வி வலயத்துக்கு உட்பட்ட தமிழ் மொழி மூல அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் …

பாடசாலை சிறந்த செயற்பாடுகளை மதிப்பீடு செய்தல் 2018/19 ஆம் ஆண்டிற்கான விருதுக்காக புத்தளம் கல்வி வலய, தெற்குக் கோட்ட ஆண்டிமுனை ஸ்ரீ கிருஷ்ணா தமிழ் ஆரம்பப் பாடசாலை கல்வி அமைச்சினால் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் கேட்போர்கூடத்தில் நாளை 24 ஆம் திகதி விருது வழங்கும் வைபவம் நடைபெறவுள்ளது. பாடசாலை சார்பாக அதன் அதிபர் K. தொண்டமான் விருத்தினைப் பெற்றுக்கொள்ளவுள்ளார்.  

ஆண்டிமுனை ஸ்ரீ கிருஷ்ணா தமிழ் ஆரம்பப் பாடசாலை 06.062016 இல் தொடங்கப்பட்டதாகும். 1000 பாடசாலைகள் அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் ஆண்டிமுனை தமிழ் மகாவித்தியாலய ஆரம்பப் பிரிவு வேறாக்கப்பட்டபோது மாணவர்கள் உடப்பு த.ம.வி., ஒற்றைப்பனை த.வி. என்பனவற்றுக்கு சென்றனர். தூரப்பிரச்சினையை கருத்திற்கொண்டு ஆண்டிமுனை கிராமத்தில் ஸ்ரீ கிருஷ்ணா ஆரம்பப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.

இப்பாடசாலையின் அதிபராக K. தொண்டமான் நியமிக்கப்பட்டார். ஆண்டிமுனை தமிழ் மகாவித்தியாலயம் போன்றே இப்பாடசாலையும் அதிபர் ஆசிரியர்களின் ஒத்துழைப்பு, விடாமுயற்சி காரணமாக முன்னேற்றம் காணத்தொடங்கியது. பல நவீன செயற்திட்டங்கள் அதிபரால் அறிமுகப்படுத்தப்பட்டு இங்கு அமுல்படுத்தப்பட்டன.

புத்தளம் கல்வி வலயத்துக்கு உட்பட்ட தமிழ் மொழி மூல அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் இப்பாடசாலையைப் பார்வையிட கள விஜயம் ஒன்றையும் 28.11.2018 இல் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது. அவ்வமயம் அங்கு அவர்களுக்கான விஷேட செயலமர்வு ஒன்றும் தமிழ்ப் பிரிவால் ஒழுங்கு செய்யப்பட்டு நடத்தப்பட்டது.