பாடசாலை மாணவர்களுக்கு ஊடகக் கருத்தரங்கு
ஸ்ரீலங்கா முஸ்லீம் ்மீடியா போரம் மாதாந்தம் மாவட்டந்தோறும் பாடசாலை உயா்தர மாணவ, மாணவிகளுக்காக நடாத்திவரும் ஊடகக் கருத்தரங்கு…
(அஷ்ரப் ஏ சமத்)
ஸ்ரீலங்கா முஸ்லீம் ்மீடியா போரம் மாதாந்தம் மாவட்டந்தோறும் பாடசாலை உயா்தர மாணவ, மாணவிகளுக்காக நடாத்திவரும் ஊடகக் கருத்தரங்கும், பயிற்சிப்பட்டரையும் நேற்று (12) கொழும்பு கைரியா மகளிா் பாடசாலையில் நடைபெற்றது. கொழும்பில் 8 பாடசாலைகளிலிருந்து 150 க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனா். இந் நிகழ்ச்சியினை Life and confidence club மகளிா் அணியும் முஸ்லீம் மீடியா போரத்துடன் இணைந்து நடாத்தியது.
21ஆம் நுாற்றாண்டில் ஊடகத்தின் பங்கு எனும் தலைப்பில் நடைபெற்றது. முஸ்லீம் மீடியா போரத்தின் தலைவா் என்.எம். அமீன், தகவல் திணைக்களத்தின் முன்னாள் பிரதிப் பணிப்பாளா் ஹில்மி மொஹமட், ஊடகவியலாளா் ஜெம்ஜித் மற்றும் சிரேஸ்ட ஊடகவியலாளா் புர்கான் பீபி இப்திக்காரும் விரிவுரைகளை நடாத்தினாா்கள்.