பிரியாவிடை நிகழ்வில் ஆசிரிய ஆலோசகர் சிவகுமார்

ண்மையில் சேவையிலிருந்து ஓய்வு பெற்ற திரு. சிவகுமார் சிவசிதம்பரம் அவர்களின் பிரியாவிடை நிகழ்வு (29-01-2023) யாழ் நகரில் அவரது இல்லத்தில் இடம்பெற்றது.
.
இந்நிகழ்வில் யாழ் பல்கலையின் முன்னாள் உபவேந்தர் உட்பட யாழ் கல்வி வலய முன்னாள் பணிப்பாளர், சிவகுமார் ஆசிரியர் இறுதியாக சேவையாற்றிய வலிகாமம் கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர், வலிகாமம் கல்வி வலயத்தின் சக ஊழியர்கள், யாழ் நகர் மற்றும் புத்தளம் என்பவற்றிலிருந்து வருகை தந்த நண்பர்கள், உறவினர்கள் கலந்து சிறப்பித்தனர்.
.
இதன் போது அவர் எழுதிய ஸ்பைடர் மேத்ஸ் நூலின் 4 வது பாகமும் அவர் பற்றிய குறிப்புக்கள் அடங்கிய சிறப்பித்தலும் வெளியிடப்பட்டது. புத்தளம் கணித மேம்பாட்டு அமைப்பின் சார்பாக அதன் தலைவர் பஷீர் மற்றும் செயலாளர் றஸ்மி ஆகியோரும் அதிபர்கள் சார்பாக ஓய்வுநிலை அதிபர் திரு ராஜா அவர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
.
இந்நிகழ்வின் போது விருந்தினர்கள், மத்திய போசன விருந்து வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
.
WAK