புகழ் பாடும் மாதங்கள்

முஸ்லிம்களின் தினசரி வாழ்க்கை இஸ்லாம் மார்க்கத்தை அடிப்படையாகக் கொண்டே நடைபெறுகின்றது. அவர்கள் தங்களின் கால நேரங்களை பிறைக் கணக்கின்படியே கணித்து வாழ வேண்டியவர்களாக   உள்ளனர். சந்திர ஆண்டே இதற்கு அடிப்படையாகும்.சந்திர ஆண்டுக்குரிய மாதங்கள் பன்னிரண்டுக்கும் அரபு பெயர்கள் இருக்கின்றன.ஆயினும் புத்தள மக்கள் பேச்சு வழக்கில் வேறு பெயர்களால் அம்மாதங்களைக் குறிப்பிட்டனர்.ஒவ்வொரு மாதத்திலும் நடைபெறும் இஸ்லாமிய விசேஷ நிகழ்ச்சிகளை அடியொட்டி அப்பெயர்கள் அமைந்தன.அரபு மாதங்களையும் , அம்மாதங்களுக்குரிய பேச்சு வழக்குப் பெயர்களையும் கீழே காண்போம்.

 1. முஹர்றம் – ஆசரா ( ஆஷூறா  )
 2. சபர் – சபுர் களி
 3. றபீவுல் அவ்வல் – மெளலுத்து ( மெளலீது )
 4. றபீவுல் ஆகிர் – முகைதீன் ஆண்டவங்க கந்தூரி / சந்தனக்கூடு
 5. ஜமாதுல் அவ்வல் – மிறார் கந்தூரி ( மதார் )
 6. ஜமாதுல் ஆகிர் – நாவுரு கந்தூரி ( நாகூர் )
 7. ரஜப் – தோவத்து / மிஹ்றாஜ் கந்தூரி
 8. ஷஃபான் – விராத்து ( பறா அத்)
 9. ரமளான் – நோன்பு
 10. ஷவ்வால் – பெருநாள்
 11. துல் கஃதா – இடையிட்ட
 12. துல் ஹஜ் – ஹஜ்ஜி

1 thought on “புகழ் பாடும் மாதங்கள்

Comments are closed.