புதிய கல்விக் கொள்கை உருவாக்கம்

புதிய தேசிய கல்விக் கொள்கை “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கை பிரகடனத்திற்கேற்ப “அனைத்துப் பிள்ளைகளுக்கும் சமமான கல்வி வாய்ப்பு” என்ற கருப்பொருளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு வருகின்றது. கல்விக் கொள்கை தொடர்பான இறுதி அறிக்கை அங்கீகரிக்கப்படுவதற்கு முன்னர் இதனை குறைந்தது இரண்டு மாதங்கள் விரிவான சமூக உரையாடலுக்கு உட்படுத்துமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஒன்லைன் மூலமான உயர்கல்வித் துறையை பிரபல்யப்படுத்த வேண்டிய அவசியம், க.பொ.த (சா.த) மற்றும் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் காலம், ஆங்கிலம் மற்றும் கணனி தொழிநுட்ப அறிவை நாட்டின் அனைத்துப் பிள்ளைகளுக்கும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்தல் தொடர்பாகவும் கல்விக்கான ஜனாதிபதி செயலணி ஆராய்ந்து வருகின்றது. (நன்றி “தினகரன்” – 10-06-2020)