புதிய பாலர் பாடசாலை திறந்து வைப்பு

புத்தளம் அல் இக்ரா வீதியில் little Angel எனும் புதிய முன்பள்ளி பாலர் பாடசாலையை ஆசிரியை ஏஞ்சலா தலைமையில் நகரபிதா எம்.எஸ்.எம்.ரபீக் அவர்கள் நேற்று (17-01-2023)  திறந்து வைத்தார்.
.
நிகழ்வில் நகரபிதா உரையாற்றுகையில் பாலர் பாடசாலைகளின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு தொடர்ந்தும் தாம் ஒத்துழைப்பு வழங்கி வருவதுடன் இப்புதிய பாடசாலை ஆசிரியைக்கும் நகரசபையின் மாதாந்த கொடுப்பனவை வழங்க உத்தேசித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
.
நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைத்த பௌத்த விகாராதிபதி நகரபிதாவின் முன் பள்ளிகள் அபிவிருத்தி விடயங்கள் மட்டுமன்றி ஏனைய சமூக நலன்சார் செயற்பாடுகளும் மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.
நிகழ்வில் நகரசபை செயலாளர்,புதிய மாணவ சிறார்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.
.
WAK