புதையல் 12- நெடுங்குளம் – 02

அன்று குளத்திற்குத் தெற்கிளிருந்த நிலப்பரப்பு வயல்களாகவும், வெறுந் தரைகளாகவும் கட்சியளிதது. மரைக்கார் தெருவுக்கு வடகரை ஓரங்களில் இருந்த ஒரு சில வீடுகளின் பின்புறமாக நெடுங்குளக்கட்டு வரை ஒரே வெளியாக இருந்தது. சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு புத்தளம் கச்சேரியிலிருந்து வடக்கு நோக்கி பார்வையிட்டால் நெடுங்குளத்தின் கட்டு தெளிவாகத்  கூறுவர். இடையே எவ்வித கட்டடமோ, வீடுகளோ அமைந்திருக்கவில்லை. சுமார் ஐம்பது வருடத்திற்குக் குறைவான காலத்திலேயே நெடுங்குளதுத் தரவை மக்களின் குடியேற்றத்துக்கு உட்பட்டதாக சனநெருக்கமுள்ள குடியிருப்பாக பல வீதிகளும், ஒழுங்கைகளும்,வீடுகளும், கட்டடங்களும் நிறைந்து கட்சியளிபதைப் பார்பதற்கு ஆச்சரியமாக அமைந்துள்ளது. அவ்வளவு வேகத்தில் சனப்பரம்பல் நடைபெறுகிறது. அப்போதைய வயல்களும், சிறுகுளங்களும்,வெற்றுத்தரைகளும்  இன்றில்லை. அதன் காரணமாக நெடுங்க்குளதிலிருந்து வழிந்தோடும் நீர் முன்பு போல நெடுங்குளத் தரவை மூலம் வெளியேறுவதில்லை.
அத்தோடு “மலேரியா அளை” என்றழைக்கப்படும் கால்வாய் குளத்தின் நீர் வெளியேறும் மதகாகிய வானிலிருந்து கடல் வரை அமைக்கப்பட்ட பின்பு குளத்திளிருந்து வழிந்தோடும் நீர் அதன் மூலமாக கடலை அடைகின்றது.இப்போது அவ்வுபயோகமான கால்வாய் நன்கு பராமரிக்கப்படாமையாலும், வீடுகளுக்குப் போக பாலங்கள் அமைந்திருப்பதனாலும்,கூலங்குப்பைகளை வீசுவதனாலும் தூர்ந்து போய் பெயரளவில் இருப்பது பெருங்கவலைக்குரியதாகும்.
அன்று புத்தளத்தில் மலேரியா சுரத்தின் தாக்கம் மிக அதிகமாக இருந்த காரணத்தினால் நுளம்பு பெருக்கத்தைக்  குறைப்பதற்காக தேங்கி நிற்கும் நீரை வெளியேற்றும் நோக்கமாகவே இக்கால்வாய் அமைக்கப்பட்டது அதன் காரணமாகவே இக்கால்வாய் “மலேரியா அளை” எனப் பெயர் பெற்றது.
பரம்பரை பரம்பரையாக நெடுங்குளம் புத்தளம் மக்களுக்கு உதவுவதற்கு கிரமமான கவனிப்பும்,பராமரிப்பும், விஸ்தரிப்பும், அவசியமென்பதை அனைவரும் உணர்தல் வேண்டும். மீஒயா ஆற்று நீரை நெடுங்குளத்துக்கு வரச் செய்வதற்கும் மலேரியா அளையை புனரமைப்புச் செய்வதற்கும் நடவடிக்கை எடுப்பது எதிர்கால நீங்காத தேவையாகும்.