புதையல் – 13 ஐயனார் குளம் – தாஜுல் அதீப் அல்ஹாஜ் ஏ .என் .எம் .சாஜஹான்

இது நெடுனங்குளத்தைத் தொடர்ந்து வடக்கு முனையில் அமைந்துள்ளது . மக்கள் இதை “அய்னா குளம் “என அழைத்தனர் . இக்குளத்தில் அயலில் ஐயனார் என்ற தெய்வத்திற்குரிய தளம் இருந்தமையினாலேயே இப்பெயரைப் பெற்றது .

இக்குளத்தில் நீர் நெடுங்குளத்தின் நீரை விட உப்புத்தன்மை மிகவும் குறைந்த நன்நீர்குளமாகும். முற்காலத்திலிருந்து புத்தளம், பாலாவி உப்பளங்களுக்கும், பொதுமக்களுக்கும் குடிநீர் விநியோகிக்கும் குளமாக இது பயன்பெற்றது. அதனால் மக்கள் குளிப்பதற்குத் தடை செய்யப்பட்டிருந்தது