புத்தளத்தின் இளம் தலைமுறையினரின் இல்லறவாழ்வின் புரிந்துணர்வுப் பயிற்சி

எனவே, திருமணத்திற்கு நிச்சயித்துள்ள, திருமணத்திற்குரிய வயதுவந்த ஆண், பெண் அனைவரும் இவ்வரிய சந்தர்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு வேண்டுகிறேன். casmo இது விடயமாக மீண்டும் …

(அபூ மர்யம்)

எமது ஊரின் இளம் தலைமுறையினரின் திருமணங்கள் அண்மையில், கணிசமான அளவு விவாகரத்தில் முடிந்திருக்கின்றன. இது இம்மண்ணில் பிறந்த அனைவரும் கவலைப்படவேண்டிய விடயம்.

அல்லாஹுத்தஆலா அனுமதியளித்தாலும், அதனை விரும்பாத அவனது அர்ஷ் நடுங்கக்கூடிய, இப்படியான விவாகரத்துக்களில் நம் இளம் சமுதாயம் ஈடுபடக்கூடாது என்ற ஈமானிய கவலையோடு, casmo கழகம் என்ற சமூக சேவைகள் செய்யும் ஒரு குழு, Pre marital counselling workshop – திருமணத்திற்கு முன்னதான ஆலோசனைக் கருத்தரங்கு ஒன்றை வெகு விரைவில் ஆரம்பிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

எனவே, திருமணத்திற்கு நிச்சயித்துள்ள, திருமணத்திற்குரிய வயதுவந்த ஆண், பெண் அனைவரும் இவ்வரிய சந்தர்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு வேண்டுகிறேன். casmo இது விடயமாக மீண்டும் தொடர்புகொள்ளும்.

இப்படிப்பட்ட விவாகரத்துகள் நம் சமுதாயத்துக்குள் ஷைத்தானின் ‘திட்டமிட்ட வலிமைமிக்க ஊடுருவலாகும்’.

இக்கொடிய ஆபத்திலிருந்து வல்ல அல்லாஹ் நம் சமுதாயத்தைக் காப்பானாக.
ஆமீன்.

/Zan