புத்தளத்தில் அரச மொழிக்கொள்கை தொடர்பான விழிப்புணர்வு

(எம்.யூ.எம்.சனூன்)

புத்தளம் மாவட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு அரச மொழிக்கொள்கை தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வொன்று (01-09-2022) புத்தளம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

புத்தளம் முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகம் (MWDT) மற்றும் கிழக்கு மாகாண சமூக அபிவிருத்தி மையம் (ESDF) ஆகியன புத்தளம் பிரதேச செயலகத்துடன் இணைந்து தேசிய அரச கரும மொழி திணைக்கள ஆணையாளர் பிரின்ஸ் சேனாதிர அவர்களால் இச்செயலமர்வு நடாத்தப்பட்டது.

மொழி சமத்துவத்தை மேம்படுத்துவதன் ஊடாக சமூக ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான கூட்டு நடவடிக்கையை மேற்கொள்வதே இச்செயலமர்வின் நோக்கமாகக்காணப்பட்டது.

இச்செயலமர்வில் புத்தளம் மாவட்ட உதவி செயலாளர், புத்தளம் பிரதேச செயலாளர் உட்பட புத்தளம் மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், தள வைத்தியசாலை, நீர்ப்பாசன பொறியியலாளர் காரியாலயம், நகரசபை, கல்வி திணைக்களம், விவசாய திணைக்களம், வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தி அரச உத்தியோகத்தர்கள் இச்செயலமர்வில் பங்குபற்றினர்.

WAK