புத்தளத்தில் காஸிமிய்யா பழைய மாணவர்களின் சினேகபூர்வ நிகழ்வு

(Rismy Adampillai)

ணையும் உறவுகளுடன் இனிய பயணம் என்ற தொனிப்பொருளில், 1990-2022 வரையான காஸிமிய்யா அரபுக் கல்லூரி பழைய மாணவர்களின் சினேகபூர்வ நிகழ்வு நேற்றைய முன்தினம் (18-09-2022) புத்தளம் ” Garden View Reception Hall “இல் காலை 9.30 தொடக்கம் மாலை 5மணி வரை நடைபெற்றது.

காஸிமிய்யாவின் மூத்த ஆசான்கள் கலந்து கொண்ட நிகழ்வில் பல சினேகபூர்வமான நிகழ்வுகள் நடைபெற்றதோடு எம்மை விட்டும் மறைந்த ஆசான்கள், எமது பழைய மாணவர்கள் பற்றிய நினைவு உரை உஸ்தாத் மின்ஹாஜ் அவர்களால் நிகழத்தப்பட்டது.

அப்துல்லா மஹ்மூத் ஆலிம் அவர்களின் குறித்த காலப்பகுதியில் காஸிமிகளின் கல்வி மேம்பாடு, உள்நாட்டு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் BA, MA, PHD மற்றும் LLB போன்ற கற்கை நெறிகளை தொடரும் அதனை நிறைவு செய்யும் வாய்ப்புக்களை காஸிமிய்யா பழைய மாணவர்கள் பெற்றுக்கொண்டது அதன் மறுசீரமைப்பாகவே கருத முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

WAK