புத்தளத்தில் போதை ஒழிப்பை தடுக்க மக்கள் முன்வரவேண்டும்

(Mohamed Darweash)

சுமார் 5 வருட காலமாக நாங்கள் போதை ஒழிப்பு சேவையினை செய்து வருகின்றோம். நாங்கள் செய்யும் இந்த சேவை நாட்டுக்கும் வீட்டுக்கும் சமூகத்திற்கும் எவ்வளவு தேவை என்பது உங்கள் யாவருக்கும் தெரியும்.

இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்த காலம் தொட்டு இது வரைக்காலமும் நாங்கள் பலவித பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றோம். அதில் ஒன்றுதான் லஞ்சம் வாங்கியுள்ளதாக பொய்குற்றச்சாற்று. மற்றொன்று தான் உயிர் அச்சுறுத்தல்.

தனியே போராடும் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஊரார் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக எமது பிள்ளைகளின் நிகழ்காலத்தை தொலைத்து இரவு பகல் பாராது சில சமயம் விடியும் வேளை வரையும் போதை ஒழிப்புக்கான கடமைகளை செய்துள்ளோம். சுமார் 3 மாத காலத்துக்குள் ஐஸ் மற்றும் தூள் போதை விற்பனையாளர்கள் 45 பேருக்கு நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கப்பட்டு சிறை அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.

இவர்களில் பலர் பலமுறை சிறை சென்றும் வந்துள்ளார்கள். இன்னும் சிலர் புதிதாக வியாபாரம் செய்தவர்கள். பாரியளவில் வியாபாரம் செய்கின்றவர்கள் சவால் விட்டுகொண்டு ஐஸ், தூள், போதை வியாபாரக் கடத்தல் செய்து கொண்டு வருகிறார்கள். இவர்களுக்கான தண்டனை பெற்று வழங்கிட முடியாத நிலை எமக்கு ஏற்பட்டுள்ளது. காரணம்.! இவர்களோடு மோத வேண்டும் என்றால் எம்மிடம் பணப்பலம் அரசியல் அதிகாரம் போன்ற நம்பிக்கை வேண்டும். கே.ஏ. பாயிஸ் எனும் அஞ்ஞா நெஞ்சன் இருந்த காலங்கள் எந்த அச்சமும் இன்றி துணிவுடன் பல சவால்களை முறியடித்து செயல்பட்டு வந்துள்ளோம். ஆனால் இப்போது எமக்கான பாதுகாப்பு மிகுந்த தேவையாக உள்ளது.

பணத்திமிறு கொண்ட போதையர்களின் சிந்தனைகள் திசைமாறி செயல்படுகின்ற காரணத்தினால் சமூகம் மீது அக்கரை உள்ள ஊர் மக்கள் ஒன்று பட்டால் மாத்திரமே இந்த சமூக சீரழிவை எம் ஊரில் இருந்து இல்லாது செய்திட முடியும். பொது மக்களாகிய நீங்கள் முன்வரா விட்டாலும் பரவாயில்லை எங்களுக்கான ஆதரவையும் எங்கள் மனைவி பிள்ளைகளுக்கான துஆவையும் வேண்டி நிற்கின்றோம்.

அத்தோடு நீங்கள் வசிக்கும் பிரதேசம் மற்றும் வீடுகளுக்கு பக்கத்தில் ஐஸ் போதை விற்பனையாளர்கள் யாரும் இருந்தால் எங்களுக்கு அறியத்தந்து சமூக சீர்கேட்டில் இருந்து மக்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மேலதிக விபரங்களுக்கு இத்தொலை பேசி இலக்கத்தை 070 394 5743 அழைக்கலாம்.

WAK