புத்தளத்தில் முதன் முறையாக சிறார்களுக்கான உடற் பயிற்சி

புத்தளம் நகரில் வதியும் சிறுவர்களின் நலன் கருதி, சிறுவர்களுக்கான உடற்பயிற்சி நிகழ்வுகள் புத்தளம் நகரில் தொடராக இடம்பெறவுள்ளன.

ரூஸி சனூன்  புத்தளம் 

புத்தளம் நகரில் வதியும் சிறுவர்களின் நலன் கருதி, சிறுவர்களுக்கான உடற்பயிற்சி நிகழ்வுகள் புத்தளம் நகரில் தொடராக இடம்பெறவுள்ளன.

புத்தளம் நகரின்  ஒரேயொரு கடின பந்து கிரிக்கெட் கழகமான லேகர்ஸ் கிரிக்கட் கழகம் இந்த சிறுவர்களுக்கான உடற்பயிற்சியினை வழங்க முன்வந்துள்ளது.

வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு புத்தளம் குவைத் வைத்தியசாலைக்கு அருகில் அமைந்துள்ள லேகர்ஸ் இல்லத்தில் இந்த பயிற்சிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.

5 முதல்  14 வயதுக்குட்பட்ட மாணவர்கள் அனைவரும் இந்த உடற்பயிற்சியில் கலந்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றார்கள் தங்கள் பிள்ளைகளின் உடல் உறுதி கருதி பிள்ளைகளை இதில் அனுமதிக்குமாறு லேகர்ஸ் கழகம் வேண்டுகிறது. உடற்பயிற்சியோடு ஒழுக்க முறை , கிரிக்கெட் பயிற்சி என்பனவும் கற்றுக்கொடுக்கப்படுகிறது.

பிள்ளைகளை இணைத்துக்கொள்ள விரும்பும் பெற்றார்கள்  0714484829  அல்லது 0715747234 என்ற தொலைபேசி இலக்கத்தோடு தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.