புத்தளத்தில் வக்பு சொத்து அபகரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
(எம்.யூ.எம்.சனூன்)
மஹரகம கபூரிய்யா அரபுக் கல்லூரியின வக்பு பொதுச்சொத்து அபகரிப்புக்கு எதிராக புத்தளம் நகரில் நேற்று (31-03-2023) வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து அமைதியான ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தை கபூரிய்யா பழைய மாணவர்களின் புத்தளம் கிளை குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக ஹிஜ்ரி 1400 மினாராவுக்கு அருகில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் பெருமளவிலானோர் இதில் கலந்துகொண்டனர்.
WAK