புத்தளத்தில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாடு

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 30 ஆவது தேசிய பேராளர் மாநாடு நேற்று (07-11-2022) முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான தேசியத் தலைவர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் புத்தளம் கே.ஏ.பாயிஸ் ஞாபகார்த்த கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
.
இதன்போது முஸ்லிம் காங்கிரஸின் புதிய நிர்வாகிகள் பட்டியலும் வெளியிடப்பட்டது. இதன்போது புத்தளம் நகரபிதா எம்.எஸ்.எம்.ரபீக் அவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் விஷேட அதி உயர்பீட உறுப்பினராகவும், கட்சியின் தேசிய சமூக சேவைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளராகவும், நகர சபை உறுப்பினர் ரணீஸ் பதுர்தீன் அவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினராகவும் தெரிவுசெய்யப்பட்டனர்.
.
WAK