புத்தளத்தை தாண்டி மாலைதீவுக்கும் பரந்தது ட்ரீம்

புத்தள மண்ணில் பிறந்து வளர்ந்து தொழில் ரீதியாக சொந்த மண்ணிலே பிரகாசித்து நிற்பவர்கள் பலர். அவர்க…

புத்தள மண்ணில் பிறந்து வளர்ந்து தொழில் ரீதியாக சொந்த மண்ணிலே பிரகாசித்து நிற்பவர்கள் பலர். அவர்களில் ஒரு சிலர் எந்த ஒரு பின்புலமும் இன்றி தமது விடா முயற்சியினாலும் பல இன்னல்களைத் தாண்டி வெற்றிப்படிகளில் ஏறி சர்வதேச அளவில் தமது தொழில் முயற்சிக்களை முன்னெடுத்தும் வருகின்றனர்.

அந்த வகையில் நம் புத்தள மண்ணுக்கு பெருமை சேர்த்து தரும் நபராக புத்தளம் கே.கே. வீதியில் அமைந்துள்ள ட்ரீம் பில்டர்ஸ் உரிமையாளர் எம்.என்.எம்.இல்ஹாம் காணப்படுகிறார். மிகவும் இளவயதினிலே ஒரு நிறுவனத்தின் உரிமையாளராக விளங்கும் இவர் கடந்து வந்த பாதைகள், பட்ட இன்னல்கள் பல.

இவற்றையும் தாண்டி பல சவால்களுக்கு மத்தியில் தனது திறமையாலும் விடா முயற்சியினாலும் கட்டிடத்துறையில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்டிருக்கின்றார். இவரது நிறுவனங்களில் ஒன்றான Dream Builders நிறுவனத்தின் அடுத்த மைல் கல்லாக மாலை தீவிலும் தனது நிறுவனத்தின் கிளையை வியாபிப்பதட்கான முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் இவர் இன்றைய இளம் தலைமுறையினருக்கு ஒரு சிறந்த உதாரணமே.

அது மட்டுமல்லாது Dream Cab Service, Dream Travels and Tours ஆகிய நிறுவனகளுக்கும் இவர் சொந்தக்காரரே. இவரை பார்த்து இன்றைய இளம் சமுதாயத்தினருக்கு இவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் நிறையவே இருக்கின்றன என்றால் மிகையாகாது.

WAK