புத்தளம் இஸ்லாஹிய்யாவில் பிராந்திய ஊழியர்களுக்கான ஒன்றுகூடல்

(ஊடகப்பிரிவு-இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி)
.
லங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் புத்தளம் உப பிராந்திய ஊழியர்களுக்கான ஒன்று கூடல் நிகழ்ச்சி நேற்று முன்தினம் 25-02-2023 சனிக்கிழமை மாலை 4.30 மணி முதல் இரவு 8.45 மணி வரை புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
.
ஹானியா ரஹா ஹாரிஸ், நைஜீல் ஸைனப் ஆகிய சிறுமிகளின் கிராஆத் மற்றும் தர்ஜுமாவுடன் ஆரம்பமானது. தலைமை உரையை பிராந்திய மனித வள பொறுப்பாளர் அஷ்ஷெய்க். ஏ.ஆர்.எம். இர்பாக் (நளீமி) வழங்கினார்கள். ஊழியர்களின் ஆன்மிக உணர்வுகளை மேம்படுத்தி புனித ரமழான் மாதத்திற்கு தயார்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த இந்நிகழ்வில் ரமழான் செயல்திட்டம் பற்றிய விளக்கம் அஷ்ஷெய்க். எம்.எல். பஸ்லுல் பாரிஸ் (நளீமி) அவர்களினால் வழங்கப்பட்டதோடு வளவாளர்களாக மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியின் முன்னாள் அதிபர், ஷெய்குல் இஸ்லாஹிய்யா உஸ்தாத் எம்.யூ.எம். ரம்ஸி அவர்களும் அஷ்ஷெய்க். அப்வான் அப்துல் ஹலீம் (நளீமி) M.A மற்றும் அஷ்ஷெய்க். எம்.ரி.எம். அப்துர் ரஹ்மான் (நளீமி) M.A ஆகியோரும் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
.
நிகழ்வினை புத்தளம் பிராந்திய ஷுரா உறுப்பினரான அஷ்ஷெய்க். ஏ.ஆர்.எம். இர்பாக் (நளிமி) நெறிப்படுத்தினார்.
நிகழ்வில் கடந்த கால பிராந்திய செயற்பாட்டுகள் பற்றி பிராந்திய செயலாளர் சகோதரர் எம்.என்.எம்.எம். ரமீஸ் முன்வைத்தார்.
.
பிராந்திய இணைப்பாளர் சகோதரர் எச்.எம். அப்துர் ரஷீத் அவர்களின் முடிவுரை மற்றும் நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் பிராந்தியத்திலிருந்து 280 ஆண், பெண் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
.
WAK