புத்தளம் ஐக்கிய வர்த்தக சங்கத்தின் அலுவலகம் திறப்பு வைப்பு

புத்தளம் ஐக்கிய வர்த்தக சங்கத்தின் அலுவலக திறப்பு விழாவும் பத்திரிகையாளர் சந்திப்பும் இன்று (21-03-2023) இடம்பெற்றது.

புத்தளம் நகரில் இருக்கும் வர்த்தகர்களின் பிரச்சினை, எதிர்கால வியாபார செயற்பாடுகளை இன்றைய பொருளாதார இடர் சூழ்நிலையில் வெற்றி கொள்வதே இதன் நோக்கமாகும்.

அத்தோடு மாநகரசபையினால் திடீரென அதிகரிக்கப்பட்ட கடைகளுக்கான வாடகை பிரச்சனை, வாகன தரிப்பிட பிரச்சனை, மற்றும் “சொப்பிங் கொம்லேக்ஸ்” வர்த்தகர்களுக்கான கடை தொகுதி சம்பந்தமான பிரச்சனைகள் முன்கொண்டு வரப்பட்டது.

புத்தளம் மாநகரசபை குருணாகல் வீதி 69 கடைகள் திடீர் வாடகை அதிகரிப்புக்கு அரசாங்கம் உரிய தீர்வினை பெற்றுத்தரவேண்டும் என கோரிக்கையும் இதன்போது விடுக்கப்பட்டது.

WAK