புத்தளம் கால்ப்பந்தாட்ட கழகங்ளுக்கு கால்ப்பந்துகள் அன்பளிப்பு

இலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளனத்தினால் புத்தளம் கால்ப்பந்தாட்ட சங்கத்தில் அங்கத்துவம் வகிக்கின்ற கழகங்களுக்கு கால்ப்பந்துகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

ரூஸி சனூன்  புத்தளம்

இலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளனத்தினால் புத்தளம்  கால்ப்பந்தாட்ட சங்கத்தில் அங்கத்துவம் வகிக்கின்ற கழகங்களுக்கு கால்ப்பந்துகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

கொவிட் 19 நீண்ட கால விடுமுறையில் பாதிக்கப்பட்ட கழகங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து புத்தளம் லீக்கின் வேண்டுகோளின் பேரில் இந்த கால்ப்பந்துகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வானது வியாழக்கிழமை (20) இரவு புத்தளம் மன்னார் வீதியில் அமைந்துள்ள தாய் சேய் சிகிச்சை நிலையத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

லீக் தலைவரும், நகர சபை உறுப்பினருமான எம்.எஸ்.எம்.ரபீக், செயலாளர் கலாநிதி எஸ்.ஆர்.எம்.ஆஷாத், பொருளாளர் எஸ்.எம்.ஜிப்ரி உள்ளிட்ட லீக்கின் உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் கழக பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

புத்தளம் லீக்கில் பதிவாகியுள்ள 12 கழகங்களுக்கு இதன் போது கால்ப்பந்துகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.