புத்தளம் சாஹிரா கல்லூரி தேசியரீதியில் அபாரம்

(எம்.யூ.எம்.சனூன்)

புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி மாணவர்கள், தேசிய மட்ட இஸ்லாமிய கலாசாரப் போட்டி நிகழ்ச்சியில் சாதித்துள்ளனர்.

அனுராதபுரம் ஸாஹிரா கல்லூரியில் அண்மையில் இடம்பெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான கர்நாடக சங்கீதப் போட்டி மற்றும் முஸ்லிம் மாணவர்களுக்கான கலாசாரப் போட்டி நிகழ்ச்சி 2022 இல் குழு நிகழ்வு மஸ் அலா கருப்பொருளுக்கு ஏற்ப புதிய வடிவிலான வினாக்களை முன்வைத்தலும் பதில் அளித்தலும் போன்ற இசை தழுவிய கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும், நஷீத் தனிப்பாடல் நிகழ்விலும் சாஹிரா மாணவர்கள் முதலிடம் பெற்று தேசிய மட்ட சாதனை படைத்தனர்.

இப்போட்டி நிகழ்ச்சிக்கு ஆரம்பத்தில் இருந்து பிரதி ஆக்கம் செய்தவர்கள், மாணவர்களுக்கு பயிற்சி அளித்தவர்கள், ஒவ்வொரு மட்ட போட்டியில் அழைத்துச் சென்ற ஆசிரியர்கள், ஒப்பனை கலைஞர்கள், அனைவருக்கும் பாடசாலை நிர்வாகம் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளது.

WAK