புத்தளம் தள வைத்தியசாலையில் கரப்பந்தாட்ட போட்டி

புத்தளம் தள வைத்தியசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைத்தியசாலை பணியாளர்களுக்கான கரப்பந்தாட்ட போட்டி நிகழ்ச்சிகள் அண்மையில் வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்றது.

நகரபிதா எம்.எஸ்.எம்.ரபீக் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி உத்தியோகபூர்வமாக போட்டிகளை ஆரம்பித்து நிகழ்வை சிறப்பித்தார்.

விஷேட அதிதியாக புத்தளம் உப பொலிஸ் பரிசோதகர் அஜித் ஹெஸிரி அவர்களும் கலந்துகொண்டார்.
போட்டிகளில் வைத்தியசாலையைச் சேர்ந்த வைத்தியர்கள் சுகாதார உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் இணைந்த 10 அணிகள் பங்குபற்றியிருந்தனர்.

ஆரம்ப நிகழ்வில் நகரசபை உறுப்பினர் ரனீஸ் பதூர்தீன், வைத்தியசாலை பணிப்பாளர், உயரதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு பிரிவுகளின் பிரதானிகள், வீதி அபிவிருத்தி அதிகாரசபை பிரதம பொறியியலாளர் அருஸ்தாசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

WAK