புத்தளம் தள வைத்தியசாலைக்கு அத்தியவசிய உபகரணங்கள் வழங்கி வைப்பு
75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு புத்தளம் தள வைத்தியசாலைக்கு அத்தியவசிய சுகாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (05-02-2023) இடம்பெற்றது. இதனை ரம்யா லங்கா நிறுவனம் புத்தளம் மக்களுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.
இதன்போது வைத்தியசாலைக்கு தேவையான 35 மடிக்கக் கூடிய கட்டில்களும், தீவிர சிகிச்சைப் பிரிவுக்குத் தேவையான படுக்கையும், மருந்துப் பொருட்களும் வழங்கப்பட்டன. நாட்டில் நிலவும் மருந்துகளுக்கான தட்டுப்பாடு நிமித்தம் மக்களுக்கு உதவும் வகையில் இது ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் புத்தளம் பிரதேச செயலாளர் திருமதி ரங்கனா ஜயதிலக்க, புத்தளம் ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் சுமித் அத்தநாயக்க, புத்தளம் பொலிஸ் நிலைய சிரேஷ்ட அத்தியட்சகர் எச்.சி. ஏ. புஷ்பகுமார மற்றும் ரம்யா லங்கா நிறுவனம் சார்பாக அலிசப்ரி உள்ளிட்டோருடன் மத தலைவர்கள், சிவில் சமூகத்தினர், நலன்விரும்பிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
WAK