புத்தளம் நகரமண்டப வளாகத்தில் மாபெரும் கவியரங்கு

ளர்ந்து வரும் கலைஞர்கள், திறமைகள் மற்றும் ஆர்வலர்களுக்கு புத்துயிர் அளிக்கும் மையமாகிய “CREATE” – (Centre for Rejuvenating Emerging Artists, Talents and Enthusiasts) நிறுவனம் புத்தளத்தில் மாபெரும் கவியரங்கொன்றை நேற்று (06-01-2023) முன்னெடுத்தது.

புத்தளம் நகரமண்டப வளாகத்தில் “முஹம்மத் என்ற முன்மாதிரி மனிதர்” என்ற கருப்பொருளில் இக்கவியரங்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆண்கள், பெண்கள் என பெருந்திரளான வாசகர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

கவிஞர்கள் திரு. Nagarajah, Hisham Hussain, M.A.C. Abdullah, Imthaath Basar, SACP Marikkar, MH Mohamed, ஷேய்க் H.M Minhaj, கவிதாயினி Sharoofiya ஆகியோரின் பிரசன்னத்தில் பலகோணங்களில் கவிதைகள் பகிரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

WAK