புத்தளம் நகரில் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக கையெழுத்து வேட்டை
பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக கையெழுத்து வேட்டை புத்தளம் நகர மத்தியில் நேற்று (19-09-2022) இடம்பெற்றது. இதன் போது பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் மற்றும் ராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோர் வருகை தந்து விளக்கம் அளித்தனர்.
ஆசிரியர் தொழிற்சங்கம் சார்பாக கலாநிதி ஆசாத் ஆசிரியர் உரையாற்றினார். முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சிகளின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள், நலன் விரும்பிகள் பொதுமக்கள் அனைவரும் இந்நிகழ்வுக்கு வருகை தந்திருந்தனர்.
WAK