புத்தளம் நகரில் பாரிய டெங்கு ஒழிப்பு சிரமதான பணி முன்னெடுப்பு

(எம்.யூ.எம்.சனூன்)

புத்தளம் நகரில் புதன்கிழமை (04-01-2023) டெங்கு ஒழிப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு புத்தளம் வாழ் மக்கள் பாரிய டெங்கு ஒழிப்பு சிரமதான பணியில் ஈடுபட்டனர்.

புத்தளம் நகர பிதா எம்.எஸ்.எம்.ரபீக் விடுத்த வேண்டுகோளை ஏற்று நகரின் பெரும்பாலான வியாபார நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.

நாட்டில் தொடர்ந்து பெய்து வந்த மழை காரணமாக புத்தளம் பிரதேசத்தில் டெங்கு நோய் பரவி வைத்தியசாலையில் அதிகமான நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டு பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்கின்றனர்.

புத்தளம் பெரிய பள்ளி, புத்தளம் நகர சபை, புத்தளம் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், புத்தளம் நகர ஜம்இய்யத்துல் உலமா கிளையினர் மற்றும் முப்படையினர் உள்ளிட்டோர் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்குடன் பாரிய சிரமதான வேலைத்திட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

04 ம் திகதி புதன்கிழமை புத்தளம் நகரம் தழுவிய சிரமதானத்தை மேற்கொண்டு சுற்றுப்புற சூழலை சுத்தமாக வைக்குமாறும், தங்கள் வீடுகளிலுள்ள டெங்கு நோய் காவி பரவக்கூடிய இடங்களை சுத்தம் செய்யுமாறும், பரிசோதிப்பதற்காக வரும் சுகாதார அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு பிரிவினருக்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தனர்.

WAK