புத்தளம் நகர சபை NFGG உறுப்பினர் ஆசிரியர் சிபாக் இன்று கன்னி உரையாற்றினார்

PPAF அங்கத்தவர் சிபாக் ஆசியரியர், இன்று (20) புத்தளம் நகர சபையின் ஆகஸ்ட் மாதக்கூட்டம் நகர பிதா கே.ஏ. பாயிஸ் தலைமையில் கூடியபோது முதல் முறையாக சபை அமர்வில் கலந்து கொண்டதுடன், தனது கன்னி உரையையும் நிகழ்த்தினார்.

கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் புத்தளம் நகர சபைக்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) சார்பாக புத்தளம் மாவட்ட அரசியல் விழிப்புணர்வு மன்றம் (PPAF) போட்டியிட்டதன் மூலம் NFGG பெற்றுக் கொண்ட ஒரு பிரதிநிதித்துவம் முதல் 2 வருடங்களிற்கு NFGG சார்பாக முன்நாள் நகர சபை உறுப்பினர் அமீன் மற்றும் சித்தி சலீமா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

இரண்டாவது 2 வருடங்கள் PPAF இற்கு வழங்கப்படுமென ஏற்கனவே உடன்பட்டவாறு PPAF அங்கத்தவர் சிபாக் ஆசியரியர், இன்று (20) புத்தளம் நகர சபையின் ஆகஸ்ட் மாதக்கூட்டம் நகர பிதா கே.ஏ. பாயிஸ் தலைமையில் கூடியபோது முதல் முறையாக சபை அமர்வில் கலந்து கொண்டதுடன், தனது கன்னி உரையையும் நிகழ்த்தினார்.

புகைப்படங்கள்- https://www.facebook.com/kabaiz1/posts/4379166738825171