புதையல் 10- புத்தளம் நகர நீர்நிலைகள் – தாஜுல் அதீப் அல்ஹாஜ் ஏ என் எம் ஷாஜஹான்

மனிதனின் வாழ்விற்கு நீர் அவசிமென்பதைச் சொல்லித்தெரிய வேண்டியதில்லை, மக்கள் தமது நாளந்த நீர்தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும்…….

மனிதனின் வாழ்விற்கு நீர் அவசிமென்பதைச் சொல்லித்தெரிய வேண்டியதில்லை, மக்கள் தமது நாளாந்த நீர்தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் விவசாயத்தில்  ஈடுபடுவதற்கும் தமது கால் நடைகளுக்கு நீரூட்டுவதற்கும்  நீர் நீலைகளை  உருவாக்கினர். அவ்வாறு உண்டாக்கிய நீர் நீலைகளை குளங்கள், மடுக்கள், வில்கள், பத்தாயங்கள் என்று அழைகின்றோம்.
இவ்வாறு புத்தளம் நகரில் பரவலாக நீர் நிலைகள் அமைத்துகொண்டமைக்கான காரணம் புத்தளத்தின் வரண்ட சுவத்தியமே என்பது புலனாகும். ஆண்டில் சொற்ப காலத்திலேயே பெய்யும் மழைநீரை சேமித்து வைப்பதற்காக இந் நீர் நிலைகள் தேவைப்பட்டன. அவை மூலம் மக்கள் தமது நீர் தேவைகளை பூர்த்தி செய்ததோடு தமது வயல்களுக்கும்  அவற்றிலிருந்து நீரைப் பெற்றனர்.
எனினும் குளங்களிருந்து நீர் பெறுவதற்கு முடியாத காலத்தில் பயிர்களைக் காப்பாற்றுவதற்காக விவசாயிகள் தமது வயற்காணிக்குள்ளேயே சிறிய நீர்த்தேக்கங்களை அமைத்து நீரை இறைத்துக் கொண்டார்கள். அத்தைகைய நீர்த்தேக்கங்களை “பத்தாயம்” என்றழைத்தனர். பொதுவாக எல்லா வயல்களிலும் இத்தகைய பத்தாயங்கள் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அப் பத்தாயங்கள் வயல்களின் சொந்தக்காரர்களின் பெயரைக் கொண்டு இனம்காணப்பட்டன.
குளங்கள், வில்கல், மடுக்கள் ,பத்தாயங்கள் கியவற்றிக்கு மழை பெய்வதன் முலமே நீர் பெறப்பட்டன. சூழவுள்ள நிலங்களில் மழை நீர் வழிந்தோடி நீர் நிலைகளை நிரப்பும். நிரம்பிய பின் மேலதிக நீர் வெளியேற “வான்” என்று குறிக்கப்படும். மதகுகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் நீர் நிலைகளின் கட்டுகள் தகர்த்து விடாமல் பாதுகாக்கப்பட்டன.
புத்தளம் நகர எல்லைக்குள் நாம் அறிந்த வகையில் இருபது நீர் நீலைகள் இருந்தனவென்று தெரிய வருகிறது. அவற்றுள் பல இன்று இருந்த இடம் தெரியாமல் மறைந்து கொண்டு இருக்கின்றன. அவ்விடத்தில் குளம் இருந்ததா என ஆச்சரியப்படும் அளவுக்கு மாறியுள்ளன.
இப்போது அந் நீர் நீலைகளைப்பற்றித் தனித்தனியாய் ஆராய்வோம்.
தொடரும் …