புத்தளம் நகர மண்டபத்தில் மாபெரும் கல்வி கண்காட்சி

மாபெரும் கல்வி கண்காட்சி எதிர்வரும் மார்ச் 2 மற்றும் 3 ஆம் திகதிகளில் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தளம் நகரமண்டபத்தில் நடைபெறவுள்ளது.

புத்தளம் நகர சபை, புத்தளம் பிரதேச செயலகம், PAQ மற்றும் YSF நலன்புரி அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாபெரும் நிகழ்வு மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரையும் இலக்காகக் கொண்டது.

நீங்கள் O/L அல்லது A/L மாணவராக இருந்தாலும், இளங்கலை அல்லது முதுகலை பட்டதாரியாக இருந்தாலும் அனைவருக்கும் இந்நிகழ்வு பயனுள்ளதாக இருக்கும். ஏராளமான கண்காட்சியாளர்கள், திரை காட்சிகள் மூலம் உங்களுக்கான பல்வேறு கல்வித் துறைகளை ஆராயலாம், தொழில் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலைப் பெறலாம். அதுமட்டுமன்றி புதிய மற்றும் அற்புதமான வாய்ப்புகளைக் கண்டறியலாம்.

இந்த நிகழ்விற்கான நுழைவு முற்றிலும் இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.

WAK