புத்தளம் பெரியபள்ளி நிருமானமும் ஜும்ஆ பரவலாக்கமும் – 9

(இஸட். ஏ. ஸன்ஹிர்)

ஜூம்ஆ பரவலாக்கத்துக்கு வக்ப் சபையின் அனுமதி 

புத்தளம் நகரில் பெரிய பள்ளியில் மட்டும் இடம்பெறும் ஜூம்ஆ நகரின் ஏனைய இடங்களுக்கும்  பரவலாக்கப்படல் வேண்டும் என்ற விடயம், இளம் முஸ்லிம் பட்டதாரிகள் சங்கத்தினால் முஸ்லிம் சமய கலாசார விவகாரத் திணைக்களத்தின் வக்ப் பகுதியின் கவனத்திற்கும் கொண்டுசெல்லப்பட்டது. இதற்காகப் பொதுமக்களின் கையொப்பங்களும் திரட்டப்பட்டன. மேலும் சங்கம் தனிப்பட்ட ரீதியில் கடிதம் ஒன்றையும் அனுப்பிவைத்தது.

அத்துடன் ஜூம்ஆ பரவலாக்கப்படல்வேண்டும் எனக்கோரி புத்தளம் நகரின் சில உலமாக்களும் வக்பு சபைக்கு நான்கு பக்கங்கள் கொண்ட மற்றுமொரு மகஜரையும் 27.08.1984 இல்  அனுப்பிவைத்தனர். இதில் பத்தொன்பதுபேர் கையொப்பமிட்டிருந்தனர்.

 

10.02.1984 அன்று YMGA யினால் முஸ்லிம் சமய கலாசார விவகாரத் திணைக்களத்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்துக்கு சாதகமான பதில் 11.12.1984 திகதியிடப்பட்ட கடிதத்தின் மூலம் கிடைக்கப்பெற்றது. வக்ப் சபை, புத்தளம் பெரியபள்ளி நிருவாகிகளுடன் தொடர்புகொண்டதற்கு இணங்க புத்தளத்தில் பிறிதொரு பள்ளியில் ஜூம்ஆ நடத்தப்படுவதற்கு பெரியபள்ளி பரிபாலனம் தடையாக இருக்காது என வக்ப் சபை, புத்தளம் இளம் முஸ்லிம் பட்டதாரிகள் சங்கத்துக்கு எழுத்துமூலம் அறிவித்தது. இதன் விளைவாக காலப்போக்கில் புத்தளம் நகரில் வேறுபள்ளிகளிலும் ஜூம்ஆக்கள் தொடங்கப்பட்டன.

இன்னும்  வரும் . . .