புத்தளம் பெரியப்பள்ளியில் போதை சம்மந்தமான விழிப்புணர்வு நிகழ்வு
(Lagoon Team)
.
“புத்தளத்தை மீண்டெழச்செய்வோம் வாரீர்” என்ற தலைப்பில் போதை சம்மந்தமான விழிப்புணர்வு நிகழ்வொன்று புத்தளம் நகரசபை மற்றும் புத்தளம் பெரிய பள்ளியின் ஒத்துழைப்புடன் லகூன் அமைப்பின் ஏற்பாட்டில் (04-03-2023) சனிக்கிழமை புத்தளம் பெரிய பள்ளியில் நடைபெற்றது.
.
இதில் புதியதோர் புத்தளத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் என்று பலர் கலந்து பயன் பெற்றனர்.
.
ஐஸ் உள்ளிட்ட போதையில் சீரழியும் நம் மக்களை நம் கரங்களை கொண்டு மீட்டெடுக்கும் முயற்சியே எமது நோக்கம் . நாம் ஒன்றுபட்டால் இதை மிக சிறப்பாக இறைவனின் துணையுடன் செய்யமுடியும். போதையற்ற புத்தளத்தை நம் பிள்ளைகளுக்காக உருவாக்க எம்முடன் கைகோர்க்குமாறு வேண்டுகின்றோம். அவர்களை போதையற்ற புதியதோர் புத்தளத்தில் வாழ்வதற்கான சூழ்நிலையினை உருவாக்குவோம்.
WAK





