புத்தளம் பெரிய பள்ளி பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவித்தல்
புத்தளம் முஹியத்தீன் ஜும்ஆ பள்ளியின் தலைமையில் கடந்த வருட ரமழான் காலம் உலமாக்கள், ஊர் தலைமைகள் மற்றும் வர்த்தக பிரமுகர்களின் வழிகாட்டலில் ரமழான் மாதம் இரவு நேரங்களை மிக பயனுள்ளதாக அமைத்து புத்தளம் நகரை சிறந்ததாக உருவாக்குவோம் என எடுக்கப்பட்ட தீர்மானங்களை இவ்வருடமும் அமுல்படுத்த தீர்மாணிக்கப்பட்டுள்ளது. புத்தளம் முஹியத்தீன் ஜும்ஆ பள்ளி நிர்வாகம் இது தொடர்பாக பொதுமக்களுக்கு …
ரூஸி சனூன் புத்தளம்
புத்தளம் முஹியத்தீன் ஜும்ஆ பள்ளியின் தலைமையில் கடந்த வருட ரமழான் காலம் உலமாக்கள், ஊர் தலைமைகள் மற்றும் வர்த்தக பிரமுகர்களின் வழிகாட்டலில் ரமழான் மாதம் இரவு நேரங்களை மிக பயனுள்ளதாக அமைத்து புத்தளம் நகரை சிறந்ததாக உருவாக்குவோம் என எடுக்கப்பட்ட தீர்மானங்களை இவ்வருடமும் அமுல்படுத்த தீர்மாணிக்கப்பட்டுள்ளது.
புத்தளம் முஹியத்தீன் ஜும்ஆ பள்ளி நிர்வாகம் இது தொடர்பாக பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இரவு நேர தொழுகைக்காக இரவு 8.00 மணி தொடக்கம் இரவு 9.30 மணி வரை அனைத்து வியாபார நிலையங்களையும் மூடுதல்.
இஷா தொழுகை தொடக்கம் இரவு 9.30 மணிவரை பொதுமக்கள் கடைகளுக்கு பொருட்களை கொள்வனவு செய்ய செல்வதை முற்றாக தவிர்ந்து கொள்ளுதல்.
இரவு நேரங்களில் கடைகளில் தொழில் புரிவோருக்கு இஷா தொழுகை தொடக்கம் இரவு 9.30 மணி வரை வணக்க வழிபாடுகளில் ஈடுபட மக்களும் கடை உரிமையாளர்களும் சந்தர்ப்பத்தை வழங்குதல்.
நோன்பு கால இரவுகளில் இளைஞர்கள், மாணவர்கள் வீணான கேளிக்கைகளை தவிர்த்து ஊரின் அமைதிக்காக ஒத்துழைப்பை வழங்குதல்.
தற்போது நாட்டிலுள்ள நிலமைகளை கருத்திற் கொண்டு மேற்படி தீர்மானங்களின் அடிப்படையில் புத்தளம் நகரை ரமழான் மாதத்தில் வணக்க வழிபாடுகளுக்கும், அமைதிக்கும் உரிய ஊராக மாற்றுவதற்கும், வியாபாரத்திலும் ஊரின் முன்னேற்றத்திலும் மிகவும் அபிவிருத்தி பொருந்திய பிரதேசமாக மாற்றுவதற்கும் அனைத்து வியாபாரிகள், ஊர் பிரமுகர்கள், சிவில் அமைப்புக்கள், இளைஞர் அமைப்புக்கள் உட்பட அனைவரினதும் ஒத்துழைப்பை வேண்டி நிற்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.