புத்தளம் பொது நூலகத்தினால் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு

புத்தளம் நகரபிதா எம்.எஸ்.எம்.ரபீக் அவர்களின் வழிகாட்டலில் “அறிவார்ந்த சமூகத்திற்கான வாசிப்பு” எனும் தொனிப்பொருளில் புத்தளம் பொது நூலகத்தினால் கடந்த ஒக்டோபர் -2022 தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் பங்குபற்றி தமது திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கான சான்றிதழ் மற்றும் பரிசளிப்பு வைபவம் நேற்று முன்தினம் (07-03-2023) கே.ஏ.பாயிஸ் ஞாபகார்த்த கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
.
நகரசபை செயலாளர் எல்.பீ.ஜி.ப்ரீத்திகா நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். சிறப்பு அதிதியாக புத்தளம் மாவட்ட சமூக அபிவிருத்தி பிரதான அதிகாரி ரத்னாயக மற்றும் பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட ஏனைய பல கௌரவ அதிதிகளும் கலந்துகொண்டனர்.
.
போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு அதிதிகளால் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நிகழ்வில் நகரசபை உயரதிகாரிகள் மாணவர்கள் மற்றும் பெற்றோரும் கலந்துகொண்டனர்.
.
WAK