புத்தளம் மாநகர சபை வேட்பாளர்களை தெரிவு செய்யும் பணி பூர்த்தி

(எம்.யூ.எம்.சனூன்)

திர்வரும் புத்தளம் மாநகர சபைக்கான வேட்பாளர்களை தெரிவு செய்யும் பணி பெரும்பாலும் பூர்த்தியடைந்துள்ளதாக புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் புத்தளம் நகர அமைப்பாளர் உவைஸ் அபூசாலிப் தெரிவித்துள்ளார்.

சிங்களம் பேசும் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட 8, 9,10 ஆகிய வட்டாரங்களில் சிங்கள வேட்பாளர்களை நிறுத்த தீர்மாணிக்கப்பட்டுள்ளது. குறித்த மூன்று வட்டாரங்களில் இரு வட்டாரங்களுக்கு வேட்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் தமிழ் பேசும் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட 1, 2, 3, 4, 5, 6, 7, 11 ஆகிய வட்டாரங்களில் தமிழ் பேசும் வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த 8 வட்டாரங்களில் 5 வட்டாரங்களுக்கு வேட்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

WAK