புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் – அசோக பிரியந்த

புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவராக அசோக பிரியந்த நியமிக்கப்பட்டுள்ளார்.

மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர்களுக்கான நியமனங்கள் முதலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வழங்கி வைக்கப்பட்டன.

யாழ். மாவட்டத்திற்கு அங்கஜன் ராமநாதனும், கிளிநொச்சி மாவட்டத்திற்கு டக்ளஸ் தேவானந்தாவும் வவுனியாவிற்கு கே.திலீபனும், மன்னார் மற்றும் முல்லைத்தீவிற்கு கே.காதர் மஸ்தானும், அம்பாறை மாவட்டத்திற்கு வீரசிங்கமும், திருகோணமலை மாவட்டத்திற்கு கபில அத்துகோரலவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய ஏனைய மாவட்டங்களுக்கான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர்களும் நியமிக்கப்பட்டனர். அதில் புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவராக அசோக பிரியந்த நியமிக்கப்பட்டுள்ளார்.